Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நல்ல இருபிங்களா டா நீங்க..! பிக் பாஸ் கவின் கோபம்..

பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமாகி தற்போது தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் கவின். இவர் தற்போது லிப்ட் எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியில் ஏழு வயது சிறுமி ஜெயப்பிரியா, 3 மிருக மனித ஜென்மங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அதிர்வாளையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைக்கு காரணமானவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என தமிழ் திரையுலக சேர்ந்த பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் பிக் பாஸ் சீசன் 3 யின் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் தனது சமூக வலைத்தளத்தில் இந்த கொடூர செயலை தாங்க முடியாமல் கோபமாக ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் கூறியது : " இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும், இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும். இன்னும் எவ்வளவு போராட வேண்டும். அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரிச்சுக்கிட்டு இருக்குற ஒரு போட்டோ, இன்னொரு போட்டோவை என்னால் பார்க்க கூட முடியவில்லை. நல்லா இருப்பிங்ககளா டா நீங்க எல்லாம். ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றதை விட பெரிய தப்பு இந்த உலகத்தில் என்ன இருக்க முடியும். பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்றவனும் பயப்படனும் தானே. அதுக்காகவாச்சும் ஒரு சட்டம் பொறக்க கூடாதா. " என மிகவும் அவேசத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார்.