Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல தயாரிப்பாளர் மரணம்! உயிழந்ததன் பின்னணி! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

கொரோனா உலகம் முழுக்க பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. வர்த்தகமும் மந்த நிலையை எட்டியுள்ளது.

அனைத்து தொழிலகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சினிமா தொழிலும் விதிவிலக்கல்ல. சினிமா ஊழியர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள் சிலர் அண்மையில் இறந்த செய்தி தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த தயாரிப்பாளர் போக்குரி ராமா ராவ் நேற்று மாலை காலமாகியுள்ளார்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றுள்ளது.

65 வயதான அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துள்ளது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.