Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி புகழ் காமெடியன் யோகிக்கு கல்யாணம்! மணப்பெண் இவர் தான்

மக்களின் பொழுது போக்கும் அம்சமாக முக்கியத்துவம் பெறுவது டிவி சானல்களே. சினிமாவை விட டிவி நிகழ்ச்சிக்களுக்கும் நல்ல வரவேற்பும் உண்டு. அதனை அதிகமான மக்கள் பின் தொடர்கிறார்கள்.

இப்படியான நிகழ்ச்சிகளில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியும் ஒன்று. இதில் பழனி, அறந்தாங்கி நிஷா, தீனா ஆகியோரை போல பலரின் மனதையும் கவர்ந்தவர் யோகி.

அவரின் உருவத்தை நிகழ்ச்சியில் மற்றவர்கள் கேலி செய்வது போல தெரிந்தாலும் அதுவே அவரின் பக்கபலம் எனலாம்.

தற்போது கொரோனா ஊரடங்கால் டிவி நிகழ்ச்சி படப்பிடிப்புகளும் இல்லை. இக்காலத்தில் பலரின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் தற்போது யோகியின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது. சிறு வயதில் இருந்தே தனக்கு நன்கு பரிட்சையமான சௌந்தர்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.