Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த விஜய் படம் விநியோகம் செய்தேன், அதன் பிறகு அந்த தொழிலேயே விட்டேன், பிரபல இயக்குனர் சோகக்கருத்து...!

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் அந்த அளவிற்கு படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது.

ஆனால், சமீபத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் விஜய் படத்தை விநியோகம் செய்து அந்த தொழிலை விட்டேன் என கூறியுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை, சக்தி சிதம்பரம் தான், இவர் என்னம்மா கண்ணு, இங்கிலிஷ்காரன் ஆகிய படங்களை இயக்கியவர்.

இவர் விஜய் நடித்த காவலன் படத்தை தமிழகம் முழுதும் விநியோகம் செய்தார்.

இப்படத்தை சில தவறான நபர்களிடம் வியாபாரம் செய்து மாட்டிக்கொண்டதால் பல கோடி நஷ்டம்.

அந்த தொழிலே வேண்டாம் என்று ஒதுங்கினேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.