கடந்த சில நாட்களுக்கு முன் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் எடுக்கப்பட்டு வந்தது. சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
இச்சம்பவம் மிகப்பெரியளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இறந்தவர்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டது. பின்னர் கரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை பாயல் ராஜ்புட் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறாராம்.
இப்படத்தில் விவேக், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பீர்த் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.