Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Nepotism குறித்து அன்றே தளபதி விஜய்யிடம் எழுப்பப்பட்ட கேள்வி, அதற்கு அவர் அளித்த செம பதில், இதோ..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் சினிமாவில் நுழைய உதவியது அவரின் தந்தை இயக்குனர் S. A. சந்திரசேகர் தான். ஆரம்ப காலத்தில் அவரே தளபதி விஜய்யின் திரைப்படங்களை இயக்கி வந்தார்.

மேலும் இது குறித்து அப்போதே அவரின் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த தளபதி விஜய் ஒரு குட்டி கதை ஒன்றையும் கூறி இருக்கிறார்.

"ஒரு பணக்கார குழந்தை மற்றும் ஒரு ஏழை குழந்தை. பணக்கார குழந்தையின் தந்தை குழந்தை சீக்கிரமாக நடக்க தள்ளுவண்டியை வாங்கி கொடுக்கிறார். ஆனால் ஏழை தந்தையால் முடியவில்லை.

கடைசியாக இரண்டு குழந்தைகளுமே நடக்கத்தான் போகிறார்கள். மேலும் ஏழை குழந்தை நடக்க ஒரு சில நாட்கள் கூடுதலாக ஆகும். ஆனால் அந்த குழந்தை எந்த உதவியும் இல்லாமல் சொந்தமாக நடக்க கற்றுக்கொள்ளும்.

ஒரு நடிகனாக முடிவு செய்துவிட்டால், பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்" என கூறியுள்ளார் விஜய்.