Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யின் படத்தில் தல அஜித்தை விமர்சிக்குமாறு வசனத்தை வைக்க நினைத்த எழுத்தாளர், அதற்கு விஜய் அளித்த பதில்..

தளபதி விஜய் மற்றும் தல அஜித் இருவருமே தற்போது தமிழ் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள்.

இவர்களின் திரைப்படங்கள் வெளியானால் அதை பண்டிகை மாதிரி கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் சென்ற வருடம் நடிகர் விஜய் பிகில் மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் வசூலை வாரி குவித்தது.

மேலும் தற்போது இவர்களின் அடுத்த திரைப்படங்களான மாஸ்டர் மற்றும் வலிமை திரைப்படங்களின் வெளியிட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வசீகரா. இப்படத்தில் தல அஜித்தை தாக்கும் வகையில் "நீயெல்லாம் பேரு வெச்சிகிட்டால் தான் வில்லன், நானெல்லாம் basic அவே வில்லன்" என்ற வசனத்தை நடிகர் விஜய்க்கு எழுதியுள்ளார்.

இதை கேட்டுவிட்டு தளபதி விஜய் "நல்லாருக்கு, ஆனால் அவருக்கு எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நிங்கள் இந்த வசனத்தை வைத்தால், நான் வேண்டுமென்றே கூறியது போல் இருக்கும். எனவே இது போன்ற வசனமெல்லாம் வேண்டாம்" என கூறியுள்ளார்.