Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

400 படங்களில் நடித்த பிரபல காமெடி நடிகர் மரணம் - திரையுலகம், ரசிகர்கள் சோகம்

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் 1 கோடிக்கு அதிகமானோரை பாதித்துள்ளது. சுமார் 6 லட்சம் பேர் இதுவரை இறந்துள்ளனர். இந்தியாவில் இவ்வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துவிட்டது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா அல்லாத உடல் நலக்குறைவால் பலர் இறந்துள்ளனர். இதில் அண்மையில் நடிகர் ரிஷி கபூர், இர்ஃபான் கான் என சினிமா பிரபலங்களும் இறந்தனர்.

இந்நிலையில் ஹிந்தி சினிமாவில் 400 க்கும் அதிகமான படங்களில் நடித்த காமெடி நடிகர் ஜக்தீப் ஜூலை 8 ம் தேதி உடல நலக்குறைவு காரணமாக மும்பை பந்தரா பகுதியில் உள்ள தன் வீட்டில் காலமாகியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் போன்ற பெரும் நடிகர்களுடன் நடித்த அவருக்கு வயது 81. ஜக்தீப் கடைசியாக கடந்த 2012 ல் வெளியான Gali Gali Chor Hai படத்தில் நடித்திருந்தார்.

அவரின் மறைவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் இறுதி சடங்கு இன்று காலை நடைபெற்றுள்ளது.