தமிழ் சினிமாவில் ஒரு ஸ்டெண்ட் கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் பொன்னம்பலம். இவரை கபாலி என்றால் தான் பலருக்கும் தெரியும்.
இவர் நாட்டாமை, முத்து ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் செம்ம பேமஸ் ஆனவர், அதை தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.
இவர் தற்போது மிகவும் உடல்நிலை முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் அவரின் சிகிச்சை செலவை கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.
மேலும், அவருடைய இரண்டு குழந்தைகள் படிப்பு செலவையும் கமலே ஏற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் பொன்னம்பலம் குணமடைந்து வரவேண்டுக் என்பதே எல்லோரின் விருப்பம்.