Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தயாரிப்பாளருக்கு கொரோனா தொற்று..! அதிர்ச்சியில் திரையுலகம்

கொரோனா வைரஸால் பல லட்சக்கணக்கான பேர்கள் மரணம் அடைந்துள்ளார்கள். குறிப்பாக திரையுலகை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பலியாகி இருக்கிறார்கள்

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் நடித்த லிங்கா உள்பட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ்.

இவர் சிம்பு, விக்ரம் என பல நடிகர்களை வைத்தும் இயக்கி இருக்கிறார். மேலும் பல தெலுங்கு மற்றும் தென்னிந்திய படங்களையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தயாரிப்பாளர் வெங்கடேஷ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவிற்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் வெங்கடேஷின் கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை என்றும் பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் முடிவுக்கு அடுத்தகட்ட சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.