Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோபித்துக்கொண்ட அஜித், ஷாலினியிடம் கேட்ட கேள்வி! வெளிப்படையாக பகிர்ந்த பிரபல நடிகர்

அஜித் கொரோனா முழுமையாக நீங்கிய பிறகு வலிமை படப்பிடிப்பை தொடரலாம் என தயாரிப்பாளருடனும், இயக்குனரிடமும் அக்கறையுடன் தெளிவாக கூறிவிட்டார்.

அஜித்துடன் ஏற்பட்ட அனுபவங்களை சினிமா நடிகர்கள், நடிகைகள் நினைவு கூர்வதுண்டு. அவ்வகையில் அஜித்தின் சீனியரும், நண்பருமான நடிகர் பப்லு சில விசயங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

இதில் தான் ஒருமுறை ஹோட்டலுக்கு சாப்பிட சென்றதாகவும், அங்கு ஷாலினியும் அவரின் மகளும் வந்திருந்தாகவும், ஆனால் நான் ஹாய் சொல்லி அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றால் அது நன்றாக இருக்காது என்பதால் விட்டுவிட்டேன்.

இதே போல இரண்டு முறை நடைபெற்றது, மறுமுறை ஹோட்டல்காரர் உங்களின் போன் நம்பரை ஷாலினி மேடம் கேட்டார்கள் என்று கூறினாராம்.

உடனே பப்லு என் நம்பரை கொடுங்கள் என கூறினேன், பின் போன் செய்த ஷாலினி மன்னிக்கவும், உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதால் நான் பேசவில்லை. அஜித்திடம் இவ்விசயத்தை சொன்னேன். அவர் பப்லு எனக்கு சீனியர், ஏன் நீ பேசாமல் வந்தாய் என ஷாலினியிடம் அஜித் கேட்டதாகவும் பப்லு கூறியுள்ளார்.