Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவால் எனக்கு ஏற்பட்ட இழப்பு! விஜய் சேதுபதி கூறிய உண்மை தகவல்..

தென்மேற்கு பருவக்காற்று எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி.

இதன்பின் பிட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உட்பட பல படங்களில் தனது எதார்த்தமான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினர்.

இதனை தொடர்ந்து விக்ரம் வேதா, பேட்ட போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து நம்மை பிரமிக்க செய்தார்.

மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் மாஸ்டர் படத்திலும் விஜய்க்கு வில்லனாக பவானி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மக்கள் செல்வம் விஜய் சேதுபதி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் ஒன்றாக : ' சினிமாவுக்கு வந்ததால் பெயர் புகழ் செல்வம் உள்ளிட்ட பல விஷயங்களை பெற்றாலும் தன்னுடைய அப்பாவித்தனத்தை சினிமாவுக்கு வந்தபின்னர் இழந்துவிட்டதாக ' விஜய் சேதுபதி கூறியுள்ளார்.