கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சாப்பாடு இவ்வளவு தானா? அட என்ன சொல்றீங்க! தினசரி லிஸ்ட் இதோ
சினிமா நடிகர்கள், நடிகைகள் லட்சங்களிலும் கோடிகளிலும் சம்பாதிப்பவர்கள். சொகுசுசான வாழ்க்கை, ஆடம்பரமான கார் என செலவழிக்க தாராளமாக பணம் இருந்தும் உணவு விசயத்தில் கடுமையான டயட் தான்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், அஜித், விஜய், நடிகை திரிஷா, நயன்தாரா, அனுஷ்கார் ஆகியோர் தினசரி என்ன சாப்படுகிறார்கள் என்ற பட்டியலை இப்போது பார்க்கலாம்.
ரஜினி :-
அசைவ உணவுகளை விரும்பி சாப்பிட்டு வந்த ரஜினி சிங்கப்பூர் சென்று உடல் நலத்திற்காக சிகிச்சை பெற்று வந்த பிறகு அசைவத்தை தவிர்த்து காலையில் பப்பாளி, நெல்லிக்காய் ஜூஸ், மதியம் கீரை சூப், சப்பாத்தி இரவில் காய்கறி சூப் மற்றும் பழங்களை சாப்பிடுகிறாராம்.
கமல் :-
தீவிரமான அசைவப்பிரியராக இருந்த உலக நாயகன் தற்போது சைவப்பிரியராக மாறிவிட்டார். காலையில் பழச்சாறு, காய்கறி சூப், மதியம் பச்சை காய்கறிகள், பயிறு வகைகள், இரவில் சப்பாத்தி சாப்பிடுகிறாராம்.
விஜய் :-
விஜய் வாரத்தில் இரண்டு நாட்கள் அசைவ உணவை எடுத்துக்கொள்கிறாராம். அநேகமாக சைவப்பிரியராகவே மாறிவிட்டாராம்.
அஜித் :-
அஜித் மற்றவர்களுக்கு பிரியாணி சமைத்து போடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர்கள் ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்த்து ஆனந்தம் அடைவார்.
நயன்தாரா :-
லேடி சூப்பர் ஸ்டார் அசைவதற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டாராம். சைவமே சிறப்பானது என இருந்துவிடுவாராம்.
திரிஷா:-
திரிஷாவுக்கு சிக்கன் பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். மூக்கு முட்ட ரசித்து உண்பாராம். இப்போது அதை குறைத்து சைவ உணவுகள் பக்கம் திரும்பிவிட்டாராம்.
அனுஷ்கா :-
உடல் எடையை குறைக்க தீவிர முயற்சி எடுத்து வரும் அனுஷ்கா அசைவத்துக்கு டாட்டா சொல்லிவிட்டாராம்.
அறிவியல் ஆராய்ச்சி செய்பவன் கடவுளை அறியமுடியாது. கடவுளின் திருநாமத்திற்கு சக்தி அதிகம். அதை ஜபிப்பதற்குரிய தகுதி தூயபக்தி.