பிக்பாஸ் புகழ் டிவி சீரியல் நடிகருக்கு கல்யாணம்! மணமாலையுடன் மணப்பெண் புகைப்படம் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் டிவி சானல்களில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஒன்று. மற்ற தொலைக்காட்சிகளுக்கும் கடும் போட்டியாக அமைந்த ஒன்று. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி என பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கில் விரைவில் சீசன் 4 தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலையாளத்தில் மோகன் லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பிரதீப் சந்திரன் போட்டியாளராக பங்கேற்றார்.
கருத்த முத்து என்ற சீரியல் மூலம் பிரபலமான பிரதீப்க்கு அனுபமா என்ற பெண்ணுடன் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது.
இண்ஸ்டாகிராமில் திருமண புகைப்படம் வெளியானதை கண்ட ரசிகர்களும், சீரியல் நடிகர்கள், நடிகைகள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வாழ்த்தியுள்ளனர்.