அழகான பாவனாவை மிரட்டலான லுக்கில் இப்படி பார்த்திருக்கீங்களா! பிரபல நடிகருடன் மாஸான டீசர் - ட்ரெண்டிங்கில் நம்பர்?
நடிகை பாவனாவை கடைசியாக ஜானு என்ற படத்தில் கன்னடத்தில் பார்த்திருப்பீர்கள். தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வந்து சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக் இது.
கடந்த சில வருடங்களுக்கு முன் நவீன் என்ற கன்னட சினிமா தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட ரொமான்ஸான புகைப்படங்களை வெளியிட்டனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு நிலவுதால் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கிறது. சினிமா பிரபலங்களும் வீட்டில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பாவனா கன்னடத்தில் பிரபல் நடிகர் ஷிவராஜ் குமாருடன் நடித்துள்ள பஜரங்கி 2 படத்தின் டீசர் வெளியானது.
இரண்டு நாட்களில் 12 லட்சம் பார்வைகளை அள்ளியிருக்கிறது.