Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் பொன்னம்பலத்தை நேரில் சென்று சந்தித்த பிரபல நடிகை! ரூ 2 லட்சம் நிதியுதவி - குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம்

சண்டைக்கலைஞராக இருந்து வில்லன் நடிகராக சினிமாவில் பல படங்களில் மிரட்டல் காட்டியவர் பொன்னம்பலம். அவரை படங்களில் பார்த்து பயந்த 90’s குழந்தைகளும் உண்டு.

பிக்பாஸ் சீசன் 2 ல் அவரை பார்த்ததும் அவரா இப்படி என அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்ததும் உண்டு. தவறுகளை கண்டிக்கவும் செய்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசனின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரின் மருத்துவ செலவுக்கு நிதிஉதவி அளித்தார். தொடர்ந்து நடிகர் கமல் ஹாசனும் நிதி உதவி வழங்க முன்வந்தார்.

இந்நிலையில் பாரதிய கட்சியை சேர்ந்த நடிகை காயத்திரி ரகுராம் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று பொன்னம்பலத்தை சந்தித்து ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.

காயத்திரி பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பொன்னம்பலம் அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்து முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் அவர் கட்சியை விட்டு விலகியதும் நினைவிற்கு வருகிறது.