Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

10 வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய்யுடன் பணியாற்றியது குறித்து நினைவு கூர்ந்த பிரபல இயக்குனர், யார் தெரியுமா?

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக மாறியுள்ளார். இவரின் திரைப்படங்களுக்கு தென்னிந்திய அளவில் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.

சென்ற வருடம் வெளியாகி வசூல் நடத்திய பிகில் திரைப்படத்திற்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் தளபதி விஜய்.

இப்படத்தின் வெளியிட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி தியேட்டர் உரிமையாளர்களும் இப்படத்தை வெளியிட அர்வாகமாக உள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேலாயுதம்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது அவரின் திரைப்படங்கள் சில பிளாப் ஆகிவந்த நிலையில் இப்படம் வெற்றியடைந்தது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் மோகன் ராஜா தளபதி விஜய்யுடன் அப்படத்தின் விழாவில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு நினைவு கூர்ந்துள்ளார்.