Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சைக்கிடையில் இளையாராஜா எடுத்த அதிரடி முடிவு! பிரச்சனைக்கு தீர்வு! இந்த விசயம் தெரியுமா

தமிழ் திரையுலகில் தன் அபார திறமையால் 1000 படங்களுக்கும் மேலாக இசையமைத்தவர் இளையராஜா. இன்றும் தன் இசையால் இக்கால தலைமுறையையும் ஈர்த்து வருகிறார்.

பிரசாத் ஸ்டூடியோ தொடர்பான சர்ச்சை அண்மையில் எழுந்தது. இந்த இடத்தில் தான் கடந்த 42 வருடங்களில் அவர் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை இசையமைத்துள்ளார்.

அவரின் இசைத்திறமைக்காக தனி இசைக்கூடத்தை எல்.வி.பிரசாத் அங்கு செய்துகொடுத்திருந்தார்.

இந்நிலையில் அவரின் வாரிசுகள் ஸ்டூடியோவை இடித்துவிட்டு புதிய தியேட்டர் கட்டவும், அதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு கொடுத்து வருமானம் ஈட்டவும் முடிவு செய்து இளையராஜாவை காலி செய்யுமாறு கூறியிருந்தனர்.

அண்மையில் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் அவரின் இசை கூடம் தொடர்பாக இடப்பிரச்சனை ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்விசயத்தில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டாததால் இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் எம்.எம்.பிரிவியூ தியேட்டரை சொந்தமாக விலைக்கு வாங்கியுள்ளாராம்.

அந்த இடத்தில் தனக்கான இசைக்கூடமாக மாற்றப்போகிறாராம். ராஜா ஸ்டூடியோஸ் என பெயர் வைத்துள்ளாராம். செப்டம்பர் மாதம் முதல் இந்த ஸ்டூடியோஸ் திறக்கப்படுகிறதாம்.