Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அச்சு அசல் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை போல் இருக்கும் நபர் மரணம்.. புகைப்படத்துடன் இதோ..

நடிகர் நடிகைகளை போலவே இருக்கும் நபர்கள், சமீபகாலமாக டிக் டாக் வீடியோக்கள் செய்து பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்கள்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரன்பீர் கபூர். மறைந்த ரிஷி கபூர் அவர்களின் மகனும் ஆவார் ரன்பீர் கபூர்.

இந்நிலையில், ரன்பீர் கபூரின் முகம் மற்றும் உடல் என அச்சு அசல் அப்படியே இருக்கிறார் காஷ்மீரை சேர்ந்த ஜூனைத் ஷா.

ஜூனைத் ஷா மும்பையில் மாடலிங் துறையில் வேலை செய்து வருகிறாராம். மாடலிங்கின் போது சில நேரங்களில் ரன்பீர் கபூரின் டூப்பாகவும் நடித்துள்ளாராம் இவர்.

இந்நிலையில், காஷ்மீரின் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ஜூனைத் ஷா வியாழக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் குடும்பத்தினர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஜூனைத் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களான ஒருவரான ரன்பீர் கபூரை பொல் அச்சு அசல் தோற்றமுடைய நபரான ஜூனைத் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், தற்போது சமூகவலைதளம் மூலம் வைரலாகி. வருகிறது.

மேலும் இவரின் மரணத்திற்கு சமூக வலைதளம் மூலம் ரன்பீர் கபூரின் ரசிகர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.