Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அருள்நிதியின் அடுத்த பட டைட்டில் இதுதானாம்! மிரட்டலான தலைப்பு

நடிகர் அருள்நிதி அழுத்தமான கதைகளையும், முக்கியத்துவமான வேடங்களையும் தேர்தெடுத்து வருகிறார். கடைசியாக அவரை K 13 படத்தில் பார்த்திருந்தோம். அறிமுக இயக்குனர் பரத் நீலிகண்டன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

அவரின் நடிப்பில் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தையும் பார்த்திருப்போம்.

நல்ல கதைக்களமாக இப்படம் அமைந்தது. குறைவான எண்ணிக்கையில் அருள்நிதி படங்களில் நடித்து வந்தாலும் அவரின் படங்களின் மீது ஒரு நம்பிக்கை இருப்பதுண்டு.

சீனு ராமசாமி இயக்கத்தில் அவர் களத்தில் சந்திப்போம் என்ற படத்தில் நடித்து வந்தார். இன்னும் சில படங்களில் அவரின் கைகளில் இருக்கின்றன.

அடுத்ததாக அவரின் 14 வது படத்தின் டைட்டில் டைரி என அருள்நிதியின் பிறந்த நாளிலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குனரான வெற்றிமாறன் இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டார்.

ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரிக்க அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்குகிறார். பவித்ரா மாரிமுத்து என்ற நடிகை இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.