Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது தான் அந்த வைரல் புகைப்படத்திற்கான காரணம். மகள், மருமகன் மற்றும் பேரன் உடன் நடிகர் ரஜினி எங்கு சென்றுள்ளார் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து உலக அளவில் மிக பிரமாண்டமாக வெளியாகி வருகிறது.

தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி, இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று ரஜினியின் லம்போர்கினி காரை ஓட்டும் புகைப்படம் வைரலானது.

மேலும் தனது மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் அவரின் பேரன் வேடந்த் உடன், அந்த காரில் கேளம்பாக்கத்தில் உள்ள Farmhouse-க்கு சென்றுள்ளாராம்.

கடந்த நான்கு மாதங்களாக ரஜினி தனது வீட்டிலேயே இருந்து போர் அடித்து விட்டதால், கேளம்பாக்கத்தில் உள்ள Farmhouse-க்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.