Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனை கடுமையாக தாக்கிய முன்னணி நடிகரின் ரசிகர், இதோ ஆதாரத்துடன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் விஜய் தொலைக்காட்சியின் மூலமாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.

அப்போது ஆரம்பித்த இவரது திறைபயணம் சிவகார்த்திகேயனை தற்போது தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனை சூர்யாவின் ரசிகர்கள் ட்விட்டரில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே நடிகர் சிவகார்த்திகேயன் சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது தான் என சில தகவல்கள் பரவி வருகிறது.

ஆம் சிவகார்த்திகேயன் பெரும்பாலும் எந்த ஒரு நடிகரின் பிறந்தநாள் என்றாலும் அவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து வாழ்த்து தெரிவித்து விடுவார்.

அந்த வகையில் இந்த ஆண்டு தளபதி விஜய் பிறந்தநாளிலும், தல அஜித் பிறந்தநாளின் போதும் தவறாமல் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

அவ்வளவு ஏன் சமீபத்தில் வந்த நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதனால் தான் சூர்யாவின் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.