Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கே.ஜி.எப் 'அதிரா' கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர்கள் நடித்தால் இப்படி தான் இருக்கும், ட்ரெண்டிங் புகைப்படங்கள்

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப். எந்தவித எதிர்பார்ப்புமின்றி வெளியான இந்த படம் இந்திய அளவில் பிரபலமானது.

மேலும் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான கே.ஜி.எப் 2 உருவாகி வருகிறது.

மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கே.ஜி.எப் 2 திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் 23 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது உள்ள கொரோனா உரடங்கின் காரணமாக தள்ளி போகவும் வாய்ப்புள்ளது.

மேலும் இந்த படத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரம் 'அதிரா', இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக அறிவித்திருந்தனர்.

சமீபத்தில் கூட அதிரா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது, உண்மையில் அந்த போஸ்டர் வேற லெவலில் இருந்தது.

இந்நிலையில் தற்போது அதிரா கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர்களை வைத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் இப்பொது வேற லெவலில் ட்ரெண்டாகி வருகிறது, இதோ அந்த புகைப்படங்கள்..