தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட சினேஹா, பிரசன்னா ஜோடி.. இதோ..
தமிழ் சினிமாவின் அழகிய திருமண ஜோடிகளில் ஒரு காதல் ஜோடி தான் நடிகை சினேஹா மற்றும் நடிகர் பிரசன்னா.
இவ்விருவரும் 2012ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இந்த ஜோடிக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. மேலும் சமீபத்தில் தான் இவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது.
இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் மகள் பிறந்தாள் என குறிப்பிட்டு அறிவித்திருந்தார் நடிகர் பிரசன்னா.
மேலும் தற்போது தங்களது பெண் குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் சினேஹா பிரசன்னா.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.