Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஊரையே திரும்பி பார்க்க வைத்த தல போஸ்டர்! யாரையோ விமர்சிப்பது போல இருக்கிறதே

அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் வலிமை படத்தில் இணைந்து நடித்து வந்தார்.

கடந்த மூன்று மாத காலமாக கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நிலைமை சீரான பின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டும் என்பது அஜித்தின் விருப்பம். மே மாதம் உழைப்பாளர் தினம் அன்று அஜித் ரசிகர்கள் வழக்கம் போல பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். போஸ்டர் ஒட்டுவது, குழந்தைகள், முதியோர் இல்லங்களில் உணவு வழங்கியும் வந்தனர். அஜித்தின் சினிமா பயணம் 28ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

தற்போது தூங்கா நகரமாகிய மதுரையில் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று இந்த ஊரடங்கு, பொது முடக்கம் காலத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே வேளையில் மறைமுகமாக யாரையோ விமர்சிப்பது போல இருப்பதாக சமூக வலைதளத்தில் பேச்சும் இடம்பெற்று வருகிறது.