Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 4! புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகர் - குஷியில் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் வேளை இது. தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 ன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த சீசன் யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் கடந்த சீசனை தொகுத்து வழங்கிய பிரபல நடிகர் நாகார்ஜூனா இந்த சீசனை தொகுத்து வழங்கவுள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதனை அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் தமிழில் விரைவில் பிக்பாஸ் சீசன் 4 குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.