Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செலவுக்கு வழியில்லாமல் அரசு மருத்துவமனையில் இறந்து போன பிரபல நடிகர்! சொத்துக்களை இழந்த சோகம் -இவருக்கா இப்படி ஒரு நிலைமை

சினிமாவில் உச்சத்தில் இடம் பிடித்து வாழ்க்கையில் பிரகாசித்தவர்கள் பலருண்டு. அதே வேளையில் கடைசி காலகட்டத்தில் பரிதாப நிலைக்கு சென்று உயிர்விட்டகளும் உண்டு.

அவ்வகையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை, நடனம், நடிப்பு, பாட்டு பாடுதல் என திறமை காட்டி பலரையும் ஈர்த்தவர் நடிகர் சந்திரபாபு.

புகழின் உச்சத்தில் இருந்தவர் கடைசி காலகட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அரசு மருத்துவமனையில் உயிர் இழந்தார்.

மாடியில் கார் பார்க்கிங், வீட்டிற்குள் நீச்சல் குளம் கொண்ட சொகுசு பங்களாவில் குடியிருந்தவர் கடைசியில் மதுபழக்கத்திற்கு அடிமையாகி சொத்துக்களை இழந்தார்.

தாலி கட்டிய மனைவியை முதல் இரவு அன்றே அவரது காதலரோடு அனுப்பி வைத்தார். வாய்ப்புகள் இல்லாததால் தற்கொலைக்கு முயன்றவரை தடுத்து எம்.ஜி.ஆர் காப்பாற்றினார்.

இப்படியாக இறந்து போன அவரை சென்னை சாந்தோம் கல்லறையில் அடக்கம் செய்தனர். அவரின் பிறந்த நாள் நேற்று. ஆனால் யாரும் அவரை பற்றி நினைக்கவில்லை எண்ணும் போது வருத்தமே மிஞ்சுகிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனரான மிஷ்கின் சந்திர பாபுவின் கல்லறையில் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

சந்திரபாபுவின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியும் நடந்தது. இந்நிலையில் மிஷ்கின் சந்திரபாபுவின் காதல் வாழ்க்கையை படமாக்கவுள்ளாராம்.