Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 65 செம்ம மாஸ் கூட்டணி உறுதி.. வெளிவந்த உறுதியான தகவல்..

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் எந்த இயக்குனருடன் கைகோர்த்து தனது 65வது படத்தை நடிக்க போகிறார் என பல சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 99% சதவீதம் உறுதியாகி இருக்கிறது. ஆம் தளபதி 65 படத்தை முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் விஜய்யை வைத்து இயக்க போகிறார்.

மேலும் இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வெளியிட போகிறது.

இதற்காக நேற்று தளபதி விஜய்யை அவரின் ஆபிஸில் சந்தித்து, படத்தின் முழு கதையையும் கூறியுள்ளாராம் முருகதாஸ்.

கதையை கேட்டவுடன் தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் ஓகே சொல்லி படத்தின் ஷூட்டிங் எப்போது என்று கேட்டாராம் தளபதி விஜய்.

இதனால் கொரானா குறைந்த பிறகு கண்டிப்பாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் கூடிய விரைவில் இப்படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்களில் யார் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்று கூடிய விரைவில் படக்குழு விடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.