Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம்.. சமூக வலைதளங்களில் டிரண்டிங்..

மாநகரம் மற்றும் கைதி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து இயக்கி இருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மளாவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் கொரானா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபபோனது.

ஆனால் கூடிய விரைவில் மாஸ்டர் படம் வரும் தீபாவளி அன்று அல்லது 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவரும் பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் அல்லது டிரெய்லர் ஏதாவது படக்குழு வெளியிட மாட்டார்களா என ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.

தற்போது இன்று மாஸ்டர் படத்தின் துணை தயாரிப்பாளரான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமாரின் பிறந்தநாள் என்பதால் மாஸ்டர் படத்தின் பூஜை அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் படக்குழு.

இதோ..