கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார், விஜயகுமார், குஷ்பூ, மீனா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் நாட்டாமை.
இப்படத்தில் நாட்டாமை சரத்குமாரின் தம்பியாக ராஜா ரவீந்தர் நடித்திருந்தார்.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது தற்போது தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் தளபதி விஜய் தான்.
இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கால்சீட் ஃப்ரீயாக இருந்தும் விஜய் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம்.
அதற்கு என்ன காரணம் என்றால் அந்தப் படத்தில் ரவீந்தர் ராஜாவுக்கு ஜோடியாக சங்கவி நடித்திருப்பார்.
ஏற்கனவே சங்கவி மற்றும் தளபதி விஜய் ஆகியோர் பற்றிய அப்போது கிசுகிசுக்கள் கோலிவுட் வட்டாரங்களில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டதால் அதை விஜய் தவிர்த்து விட்டதாக தெரிகிறது.