அப்பா, அம்மாவுக்கு பிறகு! லைக்ஸை அள்ளிய ஒரு போட்டோ! பிக்பாஸ் கவின் உருக்கமான பதிவு
முக்கிய தொலைக்காட்சியின் வாயிலாக நம் எல்லோர் மனதிலும் வேட்டையனாக ஆழப்பதிந்தவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியல் இவருக்கு முக்கியத்துவத்தை கொடுத்தது.
டிவி நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று வந்தாலும், பிக்பாஸ் வாழ்வில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது. இதில் அவர் சர்ச்சைகளை சந்தித்தார். அவரின் கஷ்டங்கள் பலருக்கும் மனவேதனை அளித்தன.
நட்புனா என்னனு தெரியுமா படத்திற்கு பின் கவின் தற்போது லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்துள்ள அம்ரிதா ஐயர் நடித்திருக்கிறார்.
அண்மையில் இப்படத்தில் டப்பிங் பணிகளை கவின் பேசி முடித்தார். இந்நிலையில் அவர் தற்போது வீட்டிலுள்ள ஒரு பழைய மின்விசிறியுடன் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.
இதில் அவர் அம்மா, அப்பாவிற்கு பிறகு இப்போது வரைக்கும் என்னுடன் இருப்பது நீ மட்டும் தான். நாம் இருவருக்கும் வயது இப்போது 30 என குறிப்பிட்டுள்ளார்.
இப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் 1.12 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.