Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் செய்ததை பார்த்து ஒரே நாளில் 1000 மரக்கன்றுகளை நட்ட பிகில் பட நடிகர், யார் தெரியுமா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் நல்வழி போகுடும் வகையில், மரகன்றினை ஒன்றை நட்டு ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதுமட்டுமின்றி இதே நடிகர் விஜய், ஜூனியர் என். டி. ஆர் மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோருக்கு மரகன்றினை நடும்படி சவால் விட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து தளபதி விஜய்யும் தனது வீட்டில் மரக்கன்றை நட்டு, அந்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் அந்த பதிவு இந்திய அளவில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது, பல நடிகர்கள் மற்றும் நடிகை தங்களின் கருத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சௌந்தர ராஜா மற்றும் குழுவினர்கள் இணைந்து தளபதி விஜய் மரக்கன்றை நட்ட அதே நாளில் 1000 மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.