Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி - கமல் இணையும் படத்தின் தற்போதைய நிலை என்ன? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல் ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது கமல் ஹாசன் அவர்கள் தான். அவரின் அரசியல் பயணம் இருப்பதால் இப்படத்தில் நடிக்க ரஜினியை ஒப்பந்தம் செய்துள்ளர்.

மேலும் ஆனால் சில மாதங்களாக இப்படம் ட்ராப் ஆகிவிட்டது என பல விதமான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் எழுந்து வந்தன.

இந்நிலையில் இந்த சர்சைகளை குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

" தற்போது அந்த படம் குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. தயாரிப்பு நிறுவனம் தான் இதுகுறித்த முடிவை எடுக்க வேண்டும். அனைத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தான பிறகு அவர்கள் தான் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரும்" என கூறியுள்ளார்.

இதனால் ரஜினி - கமல் படம் ட்ராப் ஆகவில்லை என ரசிகர்கள் உச்சாக்தில் உள்ளனர்.