Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல கோடி ரூபாயை தானமாக வழங்கிய பிரபல நடிகர்! இவ்விசயத்தில் தான் சம்பளம் அதிகமாம்

பாலிவுட் சினிமாவை சேர்ந்த டாப் லிஸ்ட் நடிகர்களில் அக்‌ஷய் குமாரும் ஒருவர். ஹிந்தி படங்களில் அவரின் சாதனையை யாராலும் எட்டியமுடியவில்லை. சிறந்த சமூக சேவகரும் கூட. சமூக கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வர தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன.

தமிழில் 2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவர் வில்லனாக பட்சி ராஜனாக நடித்ததை யாரும் மறக்க முடியாது. மிஷன் மங்கல், கேசரி, ஹவுஸ் ஃபுல் 4 ஆகிய படங்கள் கடந்த வருடம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தன.

இவ்வருடம் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன Laxmmi Bomb படத்தில் திருநங்கையாக நடித்து வருகிறார்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகரான இவர் கொரோனா நிவாரண நிதியாக ரூ 25 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தார். மேலும் மும்பை மாநகராட்சிக்கும், மும்பை போலிசுக்கும் அவர் நன்கொடை அளித்து உதவினார்.

இந்நிலையில் அவர் தற்போது பீகார் மற்றும் அசாம் வெள்ள நிவாரண நிதிக்கும் சேர்த்து ரூ 2 கோடி வழங்கியுள்ளாராம்.

அக்‌ஷய் குமார் சினிமாவை விட விளம்பரங்களில் நடித்து வாங்கும் சம்பளம் தான் அதிகம்.