அருண் விஜய்யை மனம் நெகிழ வைத்த பிக்பாஸ் பிரபலம்! மாஸான ட்வீட் - ரியாக்சன பாத்தீங்களா
நடிகர் அருண் விஜய்க்கு கடைசியாக கடந்த ஃபிப்ரவரி மாதம் மாஃபியா படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றது. நல்ல கதைகளையும் அழுத்தமான வேடங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் அருண் விஜய்.
வா டீல், அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம், ஜிந்தாபாத் என பல படங்கள் அவரின் நடிப்பில் உருவாகவுள்ளன. கொரோனா ஊரடங்கால் தற்போது படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் உடற்பயிற்சி, ஜிம், குடும்பம் என நேரம் செலவிட்டு வருகிறார்.
அவரின் நடிப்பில் வெளியான பிரியம் படம் 24 வருடங்களை கடந்துள்ளது. இதற்கான நடிகர் ஹரிஷ் கல்யாண, 24 வருடங்களாக நிறைய போராட்டங்கள், அதீத உழைப்பு கொண்டு இந்த உயரத்தை அடைந்துள்ளீர்கள். நீங்கள் உண்மையாகவே பலருக்கும் உத்வேகமாக இருக்கிறீர்கள். டியர் பிரதர் என பதிவிட்டுள்ளார்.
அதற்கு அருண் விஜய் இது அமைதியான பயணம், ஒவ்வொரு விசயத்தையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். நம்பிக்கையை விடாதீர்கள். நல்ல முயற்சிகளை எடுத்துக்கொள்ளுங்கள் என மறுபதிவிட்டுள்ளார்.
Thanks a lot brother!! 😊❤️ It’s been quite a journey, learnt from every bit of it.. Never give up hope... keep up the good work ur doing bro..👍 #24YearsOfPriyam https://t.co/xOJI1hTNRf
— ArunVijay (@arunvijayno1) August 17, 2020