Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் பட பாடல்களை வைத்து போட்டி போடும் IPL அணிகள், செம ட்ரெண்டிங் வீடியோ..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய்.

அதன்பின் யாருடன் இணைவார் என பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை குறித்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் என்றால் அது ஐ.பி.எல் தான், வருடா வருடம் நடைபெறும் இந்த ஐ. பி. எல் போட்டி இந்த முறை UAE-யில் நடைபெறவுள்ளது.

இதனிடையே மிகவும் பிரபலமான மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தளபதி விஜய்யின் வெறித்தனம் பாடலில் தங்களின் வீரர்கள் வைத்து பதிவிட்டு இருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் வாத்தி கமிங் பாடலில் தோனியை வைத்து பதிவிட்டு உள்ளனர்.

அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..