அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் மிகப் பெரிய நடிகர். இவரது பட ரிலீஸிற்காகவே பல திரையரங்குகள் காத்துக் கொண்டிருக்கின்றன என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு இவரது படங்கள் என்றாலே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும், வசூலிலும் கலக்கும். இவருக்கு சினிமாவை தாண்டி மற்ற விஷயங்களிலும் ஆர்வம் அதிகம்.
அவரை போலவே படிப்பை தாண்டி மற்ற விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அவரது மகள் அனோஷ்கா. ஆமாம் அண்மையில் இன்டர்நேஷ்னல் கூடைப்பந்து விளையாட்டிற்காக கடும் பயிற்சி எடுத்து வருகிறார்.
அந்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வெளியாக தல ரசிகர்கள் அவர் ஜெயிக்க வேண்டும் என வாழ்த்து கூறி வருகின்றனர்.