Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் விஜய் சேதுபதியின் மாஸான அடுத்த ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வித்தியாசமான கதாபாத்திரங்களையும், அழுத்தமான கதைகளையும் தேடிப்பிடித்து நடித்துவருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்து வருகிறார்.

அப்போது மாதவனுடன் நடித்த விக்ரம் வேதா படத்திற்கு எப்படி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதோ விஜய்யுடன் மாஸ்டர் படத்திற்கும் அதுபோல ஏற்பட்டுள்ளது.

பல படங்களை கையில் வைத்திருக்கும் அவரின் அடுத்த படமான கணவர் பெயர் ரணசிங்கம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது.

விருமாண்டி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், பூ ராமு, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் Zee 5 நிறுவனம் இதன் உரிமையை பெற்றுள்ளதாகவும், அக்டோபர் 2 ல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.