Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடிவேல் பாலாஜிக்காக பிரபல இயக்குனர் செய்த விஷயம் - ஆனால் கடைசியில்?

விஜய் தொலைக்காட்சியின் வாயிலாக கடந்த 10 வருடத்திற்கும் மேல் ஒரு காமெடி கலைஞாராய் மக்கள் சிரிக்க வைத்து கொண்டிருந்தவர் வடிவேல் பாலாஜி.

காமெடி நடிகர் வடிவேல் போலவே தோற்றமலிக்க கூடிய வடிவேல் பாலாஜி, ஆச்சு அசல் அப்படியே நடிகர் வடிவேலுவை அவரின் கெட்டப்பில் கண் முன் கொண்டு வருவார்.

மேலும் இதுவரை கலக்கப்போவது யாரு சப்பியன்ஸ், சிரிச்சா போச்சு, மற்றும் பல நிகழ்ச்சிகள் கோஸ்ட் ரோலாக வந்து நம்மை சிரிக்க வைத்து கொண்டிருந்தார்.

தீடீரென நேற்று உடல் நலக் குறைவு காரணமாக வடிவேல் பாலாஜி உயிரிழந்துள்ளார். இவரின் மரண செய்தி தமிழ் திரையுலகில் உள்ள பலரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் இவரை குறித்து சில விஷயங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இதில் " நான் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வரும் ’டாக்டர்’ படத்தில் வடிவேலு பாலாஜிக்கு உரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் எனது அடுத்த படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டரை ஒதுக்கி வைத்து இருந்தேன்.

மேலும் " அவரை அந்த படத்தில் சிறந்த முறையில் பயன்படுத்த நான் திட்டமிட்டிருந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது " என்று பேட்டி ஒன்றில் இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார்.