Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு புகைபிடிக்கும் காட்சியில் கூட நடிக்காத முன்னணி நடிகர்கள், யார் தெரியுமா?

நடிகர்கள் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள்.

இவர்களுக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது, மேலும் இவர்கள் இருவரும் அதிகப்படியான ஹிட் படங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் கார்த்தி நடிப்பில் சென்ற வருடம் வெளியான கைதி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது, அதனை தொடர்ந்து இவரின் சுல்தான் திரைப்படமும் உருவாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோ திரைப்படத்திற்கு பிறகு டாக்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதுவரை நடிகர் கார்த்தி 20 திரைப்படங்களிலும் நடிகர் சிவகார்த்திகேயன் 17 திரைப்படங்களிலும் நடித்துள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவரும் இத்தனை திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் எந்த ஒரு திரைப்படத்திலும் ஒரு காட்சியில் கூட புகைபிடித்தது போல் நடித்ததில்லை.