Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அறந்தாங்கி நிஷாவிற்காக 3 மணி நேரம் வடிவேலு பாலாஜி செய்த காரியம்- கண்கலங்கிய பிரபலம்

கடந்த சில தினங்களுக்கு முன் அனைவரையும் அதிர்ச்சியாக்கிய செய்தி காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் மரணம்.

நன்றாக இருந்த மனிதர் திடீரென உயிரிழந்துவிட்டாரே என அவருடன் பணிபுரிந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. ஒவ்வொருவரும் அவரது உடலை பார்த்து அழுதது இப்போதும் நம் முன்னே இருக்கும்.

இவரை பற்றி அண்மையில் அறந்தாங்கி நிஷா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, ஒருமுறை நானும், வடிவேலு பாலாஜி அவர்களும் மலேசியாவில் காமெடி ஷோ செய்ய ஒப்புக் கொண்டோம். அந்நேரம் பார்த்து எனக்கு விசா பிரச்சனை, எல்லாம் போக முடியவில்லை.

நிகழ்ச்சி உரிமையாளர்கள் நீங்கள் வந்தே ஆக வேண்டும் என்றார்கள். இந்த விஷயத்தை வடிவேலு பாலாஜியிடம் கூறினேன், அவர் நான் வருகிறேன் என்று மட்டும் கூறு என்றார்.

அதன்பிறகு எனக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் இருந்து எந்த போனும் வரவில்லை. நிகழ்ச்சி எல்லாம் முடிந்த பிறகு அவர்கள் போன் செய்து இனி எங்களது நிகழ்ச்சிக்கு வடிவேலு பாலாஜி இருந்தாலே போதும் அவரே வருடா வருடம் வர வேண்டும்.

அத்தனை லட்சம் மக்களை 3 மணிநேரம் தனி ஆளாக காமெடி செய்து அசத்தினார் என்றார்கள். அதைக்கேட்டதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது, வடிவேலு பாலாஜி அவர்கள் அந்த நேரத்தில் என் மானத்தை காப்பாற்றினார் என்று கூறியுள்ளார்.