Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் பொல்லாதவன் பட டிக்கெட்டை பிளாக்கில் விற்ற பிரபல நடிகர்

பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் சென்ராயன். அதில் நான் அப்பா ஆகிட்டேன் என அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை யாராலும் மறந்திருக்க முடியாது.

அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது, குழந்தைக்கு செம்பியன் என்றும் பெயர் வைத்துள்ளார்.

அண்மையில் ஒரு பேட்டியில் அவர், பொல்லாதவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அந்த நிறுவன உரிமையாளர் குடும்பத்துடன் பார்க்க 200 டிக்கெட் வாங்கி வைத்திருந்தார்.

பட ரிலீஸின் போது குடும்ப பிரச்சனையால் அவர் ஆந்திர செல்ல வேண்டிய நிலை. எனவே அந்த டிக்கெட்டை என்னிடம் கொடுத்து நீ உன் நண்பர்களுடன் படம் பார் என்றார்.

இதனால் என் நண்பர்களுக்கு கொடுத்தது போக மீதி இருந்து டிக்கெட்டை பிளாக்கில் விற்றேன்.

என் பட டிக்கெட்டை நானே விற்றது பெருமையாக இருந்தது என கூறியுள்ளார்.