Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோடியில் சம்பளம் வாங்கும் விஜய் முதன்முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். இவருக்கு என்று ரசிகர்கள் கூட்டம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை ஆந்திரா, கேரளா, கர்நாடகா என உள்ளார்கள்.

பாலிவுட்டிலும் விஜய்யின் படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது, அங்கேயும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்றாலே அந்த லிஸ்டில் விஜய் இடம்பெறுவார். ரஜினிக்கு இணையான இடத்தை அவர் பிடித்து வருகிறார்.

படத்துக்கு படம் கோடி கணக்கில் சம்பளம் வாங்கிவரும் விஜய் முதன்முதலாக எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

1984ம் ஆண்டு வெற்றி என்ற படத்திற்காக விஜய் வாங்கிய முதல் சம்பளம் ரூ. 500. அந்த காலத்தில் குழந்தை நட்சத்திறத்திற்கு அவ்வளவு சம்பளம் மிகவும் அதிகமாம்.

இந்த தகவலை எ.ஏ.சந்திரசேகர் அவர்களே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.