Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல்வன் படத்தில் தளபதி விஜய் நடிக்காமல் போனதற்கு இவர் தான் காரணம்! முதல் முறையாக வெளிவந்த உண்மை

இந்திய சினிமா அளவிற்கு தமிழ் திரையுலகை கொண்டு சென்றவர்களில் மிகவும் முக்கியமாவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்து பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ.700 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் 2.0.

இயக்குனர் ஷங்கர் முதன் முதலில் இயக்க படம் ஜென்டில் மேன். அர்ஜுன், மது பாலா, நம்பியார், கௌண்டமணி ஆகியோர் நடித்து வெளியான இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ் என பல ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தார். ஆனால் தமிழக அரசை திரும்பி பார்க்க வைத்த படம் இவரின் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன்.

இப்படத்தில் அர்ஜுனுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பதாக இருந்தார். ஆனால் அந்த முயற்சி கைகூடாமல் போக, இப்படத்தில் தளபதி விஜய் நடிக்க வைக்க முடிவுசெய்தார் ஷங்கர். ஆனால் எதோ ஒரு காரணத்தினால் இப்படத்தில் விஜய்யால் நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் அது என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது, " தன்னுடைய உதவி இயக்குனர் மூலமாக விஜய்யிடம் படத்தின் கதையை கூற முயற்சி செய்துள்ளார் ஷங்கர். ஆனால் அவர் அனுப்பிய உதவிய இயக்குனருக்கும் விஜய்யின் தந்தையான SACக்கும் இடையே பேச்சுவார்த்தை சரி வராத காரணத்தினால் இப்படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது.