Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி கட்சியை மறைமுகமாக தாக்கி பேசிய தளபதி விஜய் - வீடியோவுடன் இதோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவும் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்கள் மத்தியில் விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் தான் நடிக்கும் பல படங்களில் தமிழக அரசியல் கட்சியையும், மத்திய அரசையும் தாக்கி பேசும் வகையில் வசனங்களை கத்தி, மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்களில் பேசியுள்ளார்.

அதே போல் இவரின் நடிப்பில் வெளியான காவலன் படத்திற்கு அரசியல் காட்சியின் மூலம் பல விதமான எதிர்ப்புகள் எழுந்தன. அந்த சமையத்தில் நேர்காணல் ஒன்றில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.

அதில் நடிகர் விஜய்க்கு உங்களை ஆளும் தரப்பில் இருந்து ப்ரமோஷன் செய்கிறார்கள், அதேபோல் வேறு தொலைக்காட்சிகளும் உங்களை ஆதரித்து ப்ரமோஷன் செய்து வருகிறது. அவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அவர்களுக்கு யாரின் ஆதரவு வேண்டும் என ஒரு கேள்வி எழுந்தது.

அப்போது பதிலளித்த நடிகர் விஜய் " எனக்கு அனைவரும் வேண்டும், ஆனால் அதில் ஒரு தரப்பு எனக்கு ஆதரவு செய்கிறதா என " அக்கட்சியை மறைமுகமாக தாக்கி பேசினார்.