Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படங்களில் அரசியல் வசனம் பேசும் நடிகர் விஜய் ஏன் Neet குறித்து இதுவரை வாய்யை திறக்கவில்லை - வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தியளவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தமிழ் நடிகர் தளபதி விஜய். இவரின் மாஸ்டர் படத்திக்காக தான் ஒட்டுமொத்த விஜய்யின் ரசிகர்களுக்கு காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் நீட் தேர்வால் மாணவர்களின் உயிர் பலியாகி வருகிறது என கூறி அதிரடியான ஓர் அறிக்கையை வெளியிட்டார் முன்னணி நடிகர் சூர்யா. அதில் கொரோனாவிற்கு பயப்புடாமல் மாணவர்களை பள்ளி போகச்சொல்லும் நீதிமன்றம், கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதி வழங்குவது ஏன் " என கேட்டு தனது கருத்தை முன் வைத்தார்.

இதுமட்டுமின்றி அதன்பின் அகரம் நிறுவனத்தின் சார்பில் மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு வீடியோ அறிக்கை வெளியிட்டார். மேலும் தற்போது வரை நடிகர் சூர்யாவிற்கு எதிராக பல விஷயங்கள் எழுந்து வருகின்றனர்.

இந்நிலையில் படங்களில் மட்டும் அரசியல் பற்றியம், அரசியல் கட்சிகளை பற்றியும் வசனங்களை பேசும் நடிகர் விஜய் ஏன் இதுவரை நீட் தேர்வால் உயிர் இழந்த மாணவிகளுக்காக தனது குரலை கொடுக்க வில்லை என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

அதே சமையம் நீட் தேர்வால் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வீட்டிற்கு சென்று அனிதாவின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார் எங்கள் தளபதி விஜய் என கூறி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.