டுவிட்டரில் சாதனை நிகழ்த்திய விஜய்- படு கொண்டாட்டத்தில் ரசிகர்கள், இதான் மாஸ்

இளைய தளபதி விஜய் எப்போதும் ரசிகர்களுடன் ஒரு இணைப்பில் இருப்பவர். டுவிட்டர் பக்கம் இருந்தாலும் அதில் அவ்வளவாக ஆக்டீவாக இருக்க மாட்டார்.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறை சோதனை விஜய் வீட்டில் நடத்தப்பட்டது நமக்கு தெரிந்த விஷயம் தான். அந்த சோதனை முடிந்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லாததால் விஜய் நெய்வேலியில் நடக்கும் படப்பிடிப்பிற்கு சென்றார்.

அங்கு விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் சூழ்ந்துவிட்டனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் விஜய் ரசிகர்களை சந்தித்தார், அவர்களுடன் இணைந்து செல்பியும் எடுத்துக் கொண்டார்.

அந்த புகைப்படத்தை விஜய் டுவிட்டரில் ஷேர் செய்ய வைரலானது. இப்போது என்ன விஷயம் என்றால் அந்த புகைப்படத்திற்கு தான் அதிகம் ரீ டுவிட் ஆகியுள்ளதாம்.

ஒரு நடிகரின் புகைப்படத்திற்கு கிடைத்த அதிக ரீ டுவிட்டில் இதுதான் அதிகமாம். எனவே விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.