Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போலீஸ் போர்ஸ் உடன் தல அஜித், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செம ட்ரெண்டிங்..

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக திகழ்பவர், இவருக்கென்று தமிழில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும் இப்படத்தின் 50 சதவீத படபிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் விரைவில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தல அஜித் காஞ்சிபுரம் போலீஸ் போர்ஸை சந்தித்துள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆகிவருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..