Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெற்றிமாறன் படத்திற்காக வெறித்தனமான கெட்டப்பில் நடிகர் சூரி!! மாஸ் லுக்

வெண்ணிலா கபடி குழு மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களின் மூலமாகவும், தனது காமெடி நடிப்பால் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சூரி.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா,சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாபெரும் வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இப்படைப்புகளின் வெற்றியை தொடர்ந்து கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் சூர்யாவுடன் வாடிவாசல் மற்றும் சூரியுடன் ஒரு படம் என கமிட்டாகி வுள்ளார் வெற்றிமாறன்.

சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திற்காக சூரி தாடி, மீசை என செம்ம மாஸ் கெட்டப் ஒன்றில் இருந்து வந்தார். அந்த புகைப்படம் கூட இணையத்தில் மிகவும் வைரலானது.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிக்கவிருக்கும் படத்திற்காக சீமராஜா படத்திற்கு பிறகு மீண்டும் சிக்ஸ் பேக் வைத்து தனது உடலை மிகவும் ஃபிட்டாக மாற்றியுள்ளார்.