Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷின் மாரி பாடல்- வாய் பிளந்த பிரபலங்கள்

தமிழ் சினிமா நிஜமாகவே இன்டர்நேஷ்னல் வரை ரீச் ஆகியுள்ளது. அதற்கு பல உதாரணங்கள் கூறலாம், பலரின் படங்களும் அங்கு பேசப்பட்டிருக்கிறது.

இப்போது சமீபகாலமாக தென்னிந்திய சினிமா பாடல்கள் இன்டர்நேஷ்னல் மேடையில் ஒலித்து வருகிறது. Britains Got Talent என்ற ஒரு நிகழ்ச்சி ஹாலிவுட்டின் பிரபலம்.

இதில் திறமையாக நடனம் ஆடும் குழுவினர் உலகம் எங்கிலும் இருந்து பங்குபெற்று வருகிறார்கள். இந்தியாவில் இருந்து x1x crew India குழுவினர் பங்குபெற்றுள்ளார்கள்.

அவர்கள் மாரி படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தான் நடனம் ஆடியுள்ளனர். அவர்களின் நடனத்தை பார்த்து அந்நிகழ்ச்சியில் நடுவர்கள் வாய் பிளந்து பார்த்துள்ளனர்.